முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு நடந்தது. இதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியும், கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த பணியிடங்களுக்கு தற்காலிகமாக தகுதி பெற்ற 341 பேர் கொண்ட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, புவியியல், இயற்பியல், வரலாறு ஆகிய பாடங்களில் ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சிய பாடங்களில் தகுதி பெற்றவர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.