Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணி நியமனம்…. இது தா ரூல்ஸ்….. வெளியான பரபரப்பு உத்தரவு….!!!!

கோவையைச் சேர்ந்த ஜோசப் இருதயராஜ் என்பவர் 1984ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்தார். அதன்பிறகு 1991இல் பட்டப்படிப்பும், 93இல்  பிஎட் பட்டமும் பெற்றார். பின்னர் கோவை ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இதில்தான் சிக்கல் ஆரம்பித்தது. ஜோசப் இருதயராஜின் கல்வித்தகுதி வரிசையாக இல்லை என்று கூறி ஆசிரியர் நியமனத்தை பள்ளிக்கல்வித்துறை நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கில் கல்வித் தகுதியாகாது என்று கூறமுடியாது என உத்தரவிட்டார். எனவே அவருக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மற்றும் கோவை மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஆர் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 2009 அரசாணை அடிப்படையில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் பெறப்படும் பட்டங்களை பொதுப்பணிகளில் நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றில்  ஏற்றுக்கொள்ளப்படும். அதன்படி ஜோசப் இருதயராஜ் கல்வி தகுதி பெறவில்லை. எனவே இவருக்கு பணி நியமனம் தரவேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆசிரியரின் பணியை பள்ளிக் கல்வித்துறை இதுவரை பயன்படுத்தியுள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வசூலிக்க கூடாது. அதேபோல் ஆசிரியரும் தனக்கான பணப் பலன்களை கோரக் கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டனர். இந்த உத்தரவு வரிசை மாறி கல்வித்தகுதி பெறும் நபர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |