Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணி நியமனம்…. தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு…!!!!

அரசு பள்ளிகளில் பணியாற்றி கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மறு நியமனம் கோரி அளித்த விண்ணப்பங்களை எல்லாம் தமிழக அரசு நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை நியமனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளிக்கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால் பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தேவை இல்லை என்பதனால் அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், உபரி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர தொடராத நிலையில் மறு நியமனம் மறுத்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று வாதிட்டது.

அதே சமயம் கல்வி ஆண்டு மத்தியில் ஆசிரியர்கள் பணி நியமனம் ஓய்வு பெறுவதால் வழங்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி அந்த ஓய்வு பெரும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் தேவையில்லை என்று 2018இல் அரசாணை வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |