Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் பள்ளிக்கு மதுபோதையில் வந்தாரா…?? பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு இளவரசன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு வரும்போது இளவரசன் சில நேரங்களில் மது போதையில் வந்ததாக கல்வித்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. மேலும் இளவரசன் மாணவிகளை ஆபாசமாக திட்டுவதோடு, சரியாக பாடமும் நடத்தவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2-ஆம் தேதி மது போதையில் இளவரசன் பள்ளிக்கு வந்ததாக திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அண்ணாமலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் இளவரசன் மது போதையில் இருந்தது உறுதியானது. இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இளவரசனை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |