திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வெப் மூலம் வருகைப்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது.
பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் செயலியில் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு 1 தேதியிலிருந்து செயலில் வருகை பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி TNSED என்ற செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிடவற்றையும் ஆசிரியர்கள் இனி இந்த செயலி வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிட்டவும் அதை கண்காணிக்கவும், ஆசிரியர்கள், பள்ளி தலைவர்கள் மற்றும் பிற நிர்வாக பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த புதிய நடைமுறைப்படி 1-ஆம் தேதி முதல் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அமலுக்கு வந்தது. ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர் தனது கைபேசியில் உள்ள செயலியில் பதிவு செய்தார். மேலும் மாணவர்களின் வருகை பதிவை அந்தந்த வகுப்பு பொறுப்பாசிரியர்கள் கைபேசி செயலியில் உள்ளீடு செய்தார்கள்.