தென்காசி மாவட்டத்திலுள்ள சிவந்திநகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பங்கஜவல்லி(69) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவரது வீட்டிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து தென்காசி காவல் நிலையத்தில் பங்கஜவல்லி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்த பங்கஜவல்லி தனது வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டியில் வசிக்கும் ஈஸ்வரி என்பவர் திருடு போன தனது தங்க நகையை கழுத்தில் அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து பதிவிட்டதை பார்த்துள்ளார்.
இதுகுறித்து பங்கஜவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ஈஸ்வரியை போலீசார் படித்து விசாரித்ததில் அவர் தங்க நகைகளை திருடி சென்றது உறுதியானது. இதனை அடுத்து 4 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஈஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.