Categories
மாநில செய்திகள்

ஆசிரியைகள் உடனிருக்க வேண்டும்…. பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி சிறப்பு வகுப்புகள் முடிந்த பின் மாலை 5.30 மணிக்கு மாணவர்கள் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவது முதல்வர், நிர்வாகத்தினர் உறுதி செய்யவேண்டும். குழந்தைகள் உதவி மைய எண் 1098, பெண்கள் உதவி தொடர்பு எண் 181 ஆகியவை ஒட்டப்பட வேண்டும். பள்ளி பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். அவை இயங்குவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். ஆப்லைன் வகுப்பின் போது மாணவிகளுடன் ஆசிரியைகள் உடனிருப்பதை நிர்வாகம் உறுதிப்படுத்தவேண்டும். பள்ளிகளில் ஆசிரியர், மாணவிகள் பிரதிநிதி உள்ளிட்டோர் கொண்ட உள்ளூர் குழு அமைக்க வேண்டும். பள்ளி தகவல் பலகையில் எஸ்பி, கல்வி அலுவலர்களின்  அலுவலக முகவரி ஒட்டப்பட்ட வேண்டும்.

Categories

Tech |