Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை….. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….. சென்னை ஐகோர்ட் அதிரடி….!!!

சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் சுலோஜனா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது வாயை துண்டால் கட்டி கை, கால்களை கட்டிப்போட்டு மிரட்டி பீரோவில் இருந்த பணம், தாலி சங்கிலி, காமாட்சி முத்துமணி மாலை எனப்படும் மற்றொரு சங்கிலி, வளையல் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இது குறித்து அவர் சென்னை தலைமை செயலக காலனி போலீசிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வி.புதூரை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர் மகேஷ் பாலாஜி என்பது தெரிய வந்தது. சுரேஷ் கைது செய்யப்பட்டார். ஆனால் மகேஷ் பாலாஜி தலைமறைவானார். இதனால் சுரேஷ் மீதான வழக்கு மற்றும் சென்னை அல்லிக்குளத்தில் உள்ள கூடுதல் செசன் கோர்ட்டில் நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் நடந்தது. அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பி.செந்தில் ஆஜராகி வாதாடினார். அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் மீது குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபதாரமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Categories

Tech |