நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோடமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் ரிதுன் என்ற மாணவனை பள்ளியில் ஆசிரியை தெய்வம்மாள் தாக்கி ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன வருத்தத்திற்குள்ளான ரிதுன் கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு பள்ளியின் சுவரை ஏறி குதித்து வெளியே சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளிக்கு முன் வந்து “தற்கொலை செய்து இறந்த மாணவரின் சாவுக்கு நீதி வேண்டும்”என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ரிதுன் எழுதிய கடிதம் ஆசிரியரின் கையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் போலீசாரிடம் அறிவுறுத்தினார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.