Categories
மாநில செய்திகள்

ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவன் ரயில் முன் குதித்து தற்கொலை… பெரும் பரபரப்பு…!!!!!

ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் என்னும்  பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன் (வயது 15). இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மாணவண் ரிதுணை  பள்ளி ஆசிரியர் திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்திருக்கிறார்.

இதனால் மனமுடைந்த மாணவண்   பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாணவனின் மரணத்திற்கு காரணம் தெரியாமல் எந்த ஆசிரியரும் வெளியிடக்கூடாது என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு டிஎஸ்பி மற்றும் வெப்பபடை போலீஸார் கிராம மக்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்குவதில்லை என கூறி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |