ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான். வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால் மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும்.
அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த செயல் அனைவரது மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி சிரிக்க வைத்துள்ளது. பாதிரியார் கூட சிறுமியின் செயலால் சிரித்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில் தேவாலயத்தில் சிறுமியும் அவரது தாயும் ஜெபம் செய்து முடித்துவிட்டு பாதிரியாரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்கின்றனர்.
அப்போது பாதிரியார் ஆசிர்வாதம் செய்வதற்காக ஒரு கையை மேலே தூக்கி ஜெபம் சொல்கிறார். இதனை பார்த்த சிறுமி பாதிரியார் ஹைபை காட்டுகிறார் என்று நினைத்து அவரது கையில் ஹைபை அடிக்கிறாள். இதனை புரிந்துகொண்ட பாதிரியாரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனாலும் வாயை கையால் மூடி சிரித்து விட்டு பின்னர் ஜெபத்தை தொடங்குகிறார்.
இந்த காட்சி காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது. தற்போது 2 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த இந்த காணொளியை பார்த்தவர்கள் சிறுமி முகக்கவசம் அணிந்திருக்கும் போது பாதிரியார் எதற்காக முகக்கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
https://twitter.com/i/status/1318855648348700677