Categories
மாநில செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த…. நண்பனின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

பாலியல் பலாத்காரம் செய்ய ஒத்துழைக்காத நண்பனின் தாயை அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் அருகே மகசாமுந்த்தை சேர்ந்தவர் சிந்து (20 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் தாய் ஆன 42வயது பெண்மணியை அழைத்துக் கொண்டு அறுவடை இயந்திரத்தை பார்ப்பதற்காக இரவு நேரத்தில் வயல்வெளிக்கு சென்றுள்ளார். அந்தவயலில் ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்த சிந்து அந்த 42 வயது பெண்மணியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிசெய்துள்ளார். இதற்கு அந்தப்பெண்மணி  மறுப்பு தெரிவித்ததால் கோபத்தில் இருந்த சிந்து அவர் தலையில் கல்லை தூக்கிப் போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து அப்பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அந்தப் பெண்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிந்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |