ஆசைக்கு இணங்க மறுத்த மாணவியை கல்லூரி மாணவர்கள் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் அந்த மாணவியை தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த மாணவர்கள் அவரை விடாமல் தொந்தரவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவி பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
நேற்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது அந்த மாணவர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று விஷம் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிறகு வீட்டிற்கு வந்த மாணவி மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.