Categories
சினிமா

“ஆசையாக கட்டியணைக்க முயலும் ரசிகர்”…. கீழே விழுந்த பவன் கல்யாண்…. ரசிகர்கள் அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!!!

காரின் மேற்கூரையில் நின்றுகொண்டு இருந்தபோது பவன்கல்யாணை கட்டியணைக்க ரசிகர் ஒருவர் முயன்றபோது அவர் கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆவார். பிப்ரவரி 20ஆம் தேதி மேற்கு கோதாவரியில் உள்ள மாவட்டத்திற்கு மக்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார் பவன்கல்யாண். காரின் மேற்கூரையை திறந்து மக்களைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார். இவரை பார்த்தவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பிறகு காரின் மேற்கூரையின் மேல் ஏறி நின்று கொண்டிருந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் அவரை கட்டி அணைக்க முயற்சி செய்யும்போது பவன்கல்யாண் கால் வலுவிழந்து கீழே விழுந்தார். இவர் காரின் மேல் விழுந்ததால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. கீழே விழுந்து இருந்தால் அடிபட்டிருக்கும். இந்நிலையில் இவர் விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு சரியான பாதுகாப்பு இல்லை. கீழே விழுந்தால் யார் பொறுப்பாவார், பாதுகாப்பை பார்த்துக் கொள்ளுங்கள் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |