கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பரோட்டா கடையில் பாலாஜி(34) என்பவர் பரோட்டா வாங்கியுள்ளார். பின்னர் தனது பணி முடிந்து உரம் ஏற்றிச் சென்ற நண்பரின் லாரியில் கட்டப்பனாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியில் வைத்து பரோட்டா தின்றுகொண்டிருந்தபோது பரோட்டா திடீரென அவரின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதில் மூச்சி விட அவர் சிரமப்பட்டுள்ளார். இதை அறிந்த லாரி ஓட்டுநரான அவர் நண்பர் உடனடியாக அந்த பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனாலும், பரோட்டா நன்கு அவர் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சி விட முடியாமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பாலாஜிக்கு சாந்தி என்ற மனைவியும், அர்ஜுன், அஸ்வின் என்ற குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.