வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கட்டளை பகுதியில் சுரேஷ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு நரேந்திர குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் நரேந்திர குமார் மாங்கனாம்பட்டி கோவில் வனப்பகுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றிய அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், நரேந்திர குமார் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்துள்ளார். அதனை சுரேஷ் விற்பனை செய்ததால் மன உளைச்சலில் நரேந்திர குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.