பசுமாடு இறந்த துக்கம் தாங்காமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்ததோடு மட்டுமல்லாமல் இட்டேரி பகுதியில் தொழுவம் அமைத்து மாடுகளை பராமரித்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தினமும் மாட்டிற்கு தீவனம் வைப்பது , தண்ணீர் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறு நாராயணன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென அவர் ஆசையாக வளர்த்து வந்த பசுமாடு ஒன்று இறந்தது.
இதனால் நாராயணசாமி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாட்டு தொழுவத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தொழுவதற்கு சென்று பார்த்தபோது நாராயணசாமி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நாராயணசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.