கணவன் பானிபூரி வாங்கிட்டு வந்ததால் ஏற்பட்ட சண்டையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வருபவர் 33 வயதான ககினிநாத் சர்வடே.. இவருக்கு 23 வயதில் பிரதிக்ஷா என்ற மனைவி இருக்கிறார்.. இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகி விட்டது.. இருப்பினும் 2 பேரும் எப்போதுமே எலியும் பூனையுமாய் சண்டை போட்டுக்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.. இந்தநிலையில் கடந்த வாரம் வெள்ளி கிழமை அன்று ககினிநாத் தன்னுடைய மனைவிக்கு ஆசை ஆசையாக பானி பூரி வாங்கி வந்திருக்கிறார்..
ஆனால் மனைவி பிரதிக்ஷா கணவரின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் மீண்டும் சண்டை போட்டுள்ளார்.. என்னிடம் கேட்காமல் ஏன் பானிபூரி வாங்கிட்டு வந்தீங்க.. நான் இரவு உணவு சமைத்து விட்டேன் என்று கூறி கணவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்கும் இடையே பெரிய சண்டையே வந்துவிட்டது.. இதனால் மனம் நொந்து போன பிரதிக்ஷா சனிக்கிழமை காலையில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்..
பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பிரதிக்ஷா பரிதாபமாக இறந்து போனார்.. இதையடுத்து பிரதிக்ஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி கணவர் ககினிநாத் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்..