மதுரையில் சந்தன மரத்தை வெட்டி கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள்.
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து மக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆங்காங்கே சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கிறார்கள். இச்செயல்களில் மிக முக்கியமாக திருட்டுச் சம்பவமும் கருதப்படுகிறது. இதனை தடுக்க காவல்துறையினர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலூரில் விஜய்ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் அரசு அனுமதியுடன் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். இதில் ஏழு மரங்களை மர்ம நபர்கள் இரவோடு இரவாக வெட்டி கடத்தியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜய்ஆனந்த் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.