Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய கட்டிட மேஸ்திரி…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் கட்டிட மேஸ்திரியான கார்த்திக் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் அந்த சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |