சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.