திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக் குமார் என்ற மகன் உள்ளார். கூலி தொழிலாளியான அசோக் குமார் கடந்த 2018-ஆம் ஆண்டு திருநெல்வேலியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை சிறப்பு நீதிமன்றம் அசோக்குமாருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.