ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் நான்கு பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அணில் பிரகாஷ் மிஸ்ரா என்பவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கிராம வங்கி அதிகாரியான அணில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்று அதிக கவனம் செலுத்தி அவர்களை படிக்க வைத்தார்.
பின்னர் தனது பிள்ளைகள் நால்வரையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு என யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக ஆலோசனை வழங்கினார். மூத்த மகன் யோகேஷ் மிஸ்ரா இன்ஜினியரிங் படித்தார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முதல் முயற்சியில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆனார். இவரது தங்கை சர்மா மிஸ்ரா மூன்று முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவினார். இருந்த போதிலும் தனது விடா முயற்சியால் நான்காவது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றார். மற்றொரு தங்கையான மாதிரி மிஸ்ரா முதுகலை பட்டம் பெற்றவர். இவர் 2014ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார்,
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். அடுத்த ஆண்டு நடந்த தேர்வில் அணில் பிரசாந்தின் கடைசி மகனான லோகேஷ் மிஸ்ரா தேர்ச்சி அடைந்து தேசிய அளவில் 44 வது இடத்தை பிடித்துள்ளார். இது தொடர்பாக அந்த பிள்ளைகளின் தந்தை கூறியதாவது: “நான் இப்போது மகிழ்ச்சியுடனும், தலைநிமிர்ந்தும் நிற்கிறேன். இதற்கு காரணம் என்னுடைய பிள்ளைகள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்று பெருமிதமாக தெரிவித்தார் .