இங்கிலாந்தில் மலை உச்சியின் ஓரத்திலிருந்து சைக்கிளோடு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் ஒருவர் 5 மாதங்களுக்குப் பின் அதிலிருந்து மீண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் காரா என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக நார்வேயிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு தனது காதலனுடன் விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார்.
அவ்வாறு சென்ற காரா 80 அடி உயரமுடைய மலை உச்சியிலிருந்து தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிளோடு கீழே விழுந்துள்ளார். இதனால் காரா எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காரா மருத்துவர்களின் உதவியோடு 5 மாதத்திற்கு பின்பு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.