சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நேற்று அங்கப்பிரதட்சணம் செய்து சென்றுள்ளார்.
பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல 2 பாதைகள் இருக்கிறது. அந்த பாதைகள் 5 கிலோமீட்டருக்கு மேல் தூரம் இருக்கும். அந்தப் பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஆனந்த் பத்மநாபன் என்ற ஐயப்ப பக்தர் தன்னுடைய மகனுடன் சபரிமலைக்கு வந்தார். நேற்று முன்தினம் பம்பையிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்தபடி சன்னிதானத்தை நோக்கி சென்றார்.
அவருக்குப் பின் ஏராளமான பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியபடி சென்றுள்ளனர். நேற்று இரவு மரக்கூட்டம் பகுதியில் தங்கிய அனந்தபத்மநாபன், இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு சன்னிதானத்தை அடைந்தார். அதன் பின்னர் அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினார். சபரிமலை சன்னிதானத்திற்கு ஒரு பக்தர் அங்கப்பிரதட்சணம் செய்த படி வருவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சபரிமலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.