Categories
சினிமா

ஆச்சார்யா படம் தோல்வி…. நடிகர் சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு…. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன் மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் சென்ற ஏப்ரல் மாதம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. எனினும் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் காட்பாதர் தெலுங்கு திரைப்படம் ரூபாய்.120 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி இருக்கிறது. இதன் காரணமாக மகிழ்ச்சியில் உள்ள சிரஞ்சீவி தோல்வியடைந்த ஆச்சார்யா திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டார். இது தொடர்பாக ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசியதாவது “படம் தோல்வியடைந்ததால் அதற்குரிய முழுப் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்.

இதனால் தனக்கு எந்த குற்ற உணர்வுமில்லை. நானும், ராம்சரணும் ஆச்சார்யா திரைப்படத்துக்காக வாங்கிய சம்பளத்திலிருந்து 80 % தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்து விட்டோம்” என்று கூறினார். இதன் காரணமாக சிரஞ்சீவிக்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். வெற்றிகரமாக ஓடும் காட்பாதர் திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. காட்பாதர் திரைப்படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட்பிலிம்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து சிரஞ்சீவி தயாரித்து இருக்கிறார். அப்படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். அதில் சல்மான்கான், சமுத்திரக்கனி, சத்யதேவ், தான்யா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

Categories

Tech |