Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆடம்பரமாக நடைபெற்ற பேரனின் பிறந்தநாள்” பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேதிபுரம் கிராமத்தில் முதியவரான  ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் தனது பேரனின் பிறந்தநாளை அதிகமாக செலவு செய்து கொண்டாடியுள்ளார். இந்நிலையில்  ஜெயராமனுக்கும் அவரது மகன்  கலைச்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஜெயராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கலைச்செல்வன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |