ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நாளை 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடுகட்டும் வகையில் வருகிற 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த தினத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவானி முடிவு சட்டம் 1881 இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களுக்கும் அரசு பாதுகாப்புக்கான அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட பணியாளர்களோடு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.