தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட உள்ளது.
இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் பொதுமக்கள் நீராட தடை விதித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.