வல்வில் ஓரி, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவையொட்டி சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மேட்டூரில் இருந்து கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த சிறப்பு பேருந்துகளானது வரும் 2 மற்றும் 3 தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர், பவானி, கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை, அரபலீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர், கொடும்முடி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றது.
மேலும் திருச்சங்கோட்டில் இருந்து கொடும்முடி, பவானி சங்ககிரியில் இருந்து பவானி, ராசிபுரத்தில் இருந்து காரவள்ளி, கொல்லிமலை காரவள்ளியில் இருந்து அரபலீஸ்வரர் கோவில், எடப்பாடியில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகளை பயன்படுத்துமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி கூறியுள்ளார்.