Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடிப்போன கமல், ரஜினி….. சின்னத்தால் அப்செட்…. ஷாக் ஆன தொண்டர்கள் …!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே தேர்தல் வியூகம் களைகட்டியுள்ளது. பிரச்சார உத்திகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த தேர்தல் சற்று வித்தியாசமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. பெரும் தலைவர்களான கருணாநிதி ஜெயலலிதா இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்கின்றன.

திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போட்டிக்கு மேலும் நான்கு கட்சிகள் உள்ளன. மக்கள் நீதி மைய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மேலும் ரஜினியின் கட்சி என நான்கு கட்சிகள் உள்ளதால் கூட்டணி மாறலாம் என சொல்லப்படுகிறது.

இதனிடையே நேற்று தேர்தலுக்கான அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னமும் வழங்கப்பட்டது. அதில் ரஜினி சார்பாக பாபா பாபா முத்திரை கேட்ட நிலையில் ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

கமலின் மக்கள் நீதி மைய்யத்துக்கு தமிழகத்தில் சின்னம் ஒதுக்காத நிலையில் புதுவையில் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்காத தேர்தல் ஆணையம் கமலுக்கும் தமிழகத்திற்கு சின்னம் ஒதுக்காதது தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |