தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அதிமுக உறுப்பினர் கூட இல்லை. பிறகு எப்படி அவர் உரிமை கோர முடியும். அவர் அரசியலிலிருந்து விலகுவதாக கூறினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு நல்ல வாக்குகள் கிடைத்தன. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என சசிகலா எதிர்பார்த்தார். அதிமுகவில் எடுபடாத, பிரித்து ஆளவேண்டும் என்ற கொள்கையை சசிகலா பின்பற்றுகிறார். கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவினரை பிரித்து கட்சியை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் சூழ்ச்சி எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூளுரைத்துள்ளார்.