முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்று தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
தர்ப்பணம் என்பது ‘திருப்தி’ என்னும் பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்தி படுத்துவது ஆகும். எள்ளும், நீரும் கலந்து தர்ப்பணம் செய்வது அமாவாசை அல்லது திதி நாட்களில்தான் செய்வர். அமாவாசை அன்று வீட்டில் வெளியில் தண்ணீரில் எள் கலந்து வைப்பார்கள். அப்படி செய்தால் அந்த நாள் அன்று இறந்தவர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு அவர்கள் ஆசி வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.
சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாள் தான் அமாவாசை. அமாவாசை தினம் அன்று ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் எள் கலந்த தண்ணீர் வைத்தால் முன்னோர்கள் வந்து பசியினை தீர்த்து கொள்வர். அன்றைய தினம் இதனை செய்ய தவறினால் அது தோஷமாக மாறிவிடும் என்று கூறுகின்றனர்.
தர்ப்பணம் செய்து முடித்ததற்கு பிறகே, வீட்டில் பிற காரியங்கள் அதாவது பூஜைகள் எல்லாம் நடத்த வேண்டும். இந்த தர்ப்பணம் செய்வது கூட வீட்டில் இருக்கும் அனைவரது நன்மைக்காகத்தான் செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள். 96 நாட்கள்தான் மிக மிக உத்தமமான நாட்கள் தாய், தந்தையரின் திதி நாட்கள் அன்றும் தர்ப்பணம் செய்யலாம்.
திதி கொடுக்கும் போது பெயர் சொல்வதற்கு காரணம், ஒரே நாளில் பலருக்கு திதி கொடுப்பர். அது சரியாக முன்னோர்களுக்கு போய் சேருமோ என்று பலரும் எண்ணுவர், இனி இந்த சந்தேகம் யாருக்கும் வராது. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு திதி செய்யும் நாட்கள் மிகவும் புண்ணியங்கள் தரும். இதனால் அவரவருக்கு சரியாக அந்த தர்ப்பணம் போய் சேரும்.