சூரியனும், சந்திரனும் ஒன்றாக சேரக்கூடிய நாள்தான் அமாவாசை. அன்றைய தினம் இருவரும் ஒரே ராசியில் சஞ்சரிப்பார்கள். அந்த நாளில் இரண்டு கிரகங்களில் ஆதர்சன சக்தி மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மனித மூளையில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே தான் நம் மனம் கொந்தளிப்பு அல்லது சில சஞ்சலத்துடனேயே இருக்கும். இந்நிலையில் ஆடி அமாவாசை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அமாவாசை தினம் என்றதும் நம் மனதில் இன்று சுபகாரியங்கள் செய்யலாமா? கூடாதா என்று பல கேள்விகள் எழும். எனவே அமாவாசை அன்று செய்ய வேண்டிய, செய்ய கூடாத சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
செய்ய வேண்டிய விஷயங்கள்:
இன்றைய தினத்தில் முன்னோர்களையும், பெரியவர்களையும் வழிபட வேண்டியது சிறப்பான விஷயம்.
முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுக்கலாம்.
அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாடு செய்யும்போது மணியடித்து வழிபடக்கூடாது.
படையில் வைத்தது மட்டுமல்லாமல் காக்கைக்கு உணவு வைத்துவிட்டு பிறகு சாப்பிட வேண்டும்.
குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த நாளை புனித சேர்க்க வேண்டும் என்றால் உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய்து வரலாம்.
செய்யக்கூடாதவை:
பொதுவாக நம் வீட்டு வாசலில் கோலம் இடுவது இறைவனை வரவேற்பதற்காக தான். ஆனால் அமாவாசை தினத்தன்று கோலமிடுவதால் வீட்டுக்கு வர வேண்டி நம் முன்னோர்களும் வீட்டில் வர நினைத்தாலும் அது வீட்டு வாசலில் இருக்கும் கோலத்தினால் திரும்ப சென்று விடுவார்கள்.
அமாவாசை தினத்தில் நாம் மிகவும் கடினமான புதிய முயற்சி செய்யக் கூடாது. அப்படி செய்யும்போது நம்முடைய உடலில் ஏதேனும் சிறு காயம் ஏற்பட்டாலும் அதன் வீரியம் அதிகமாக இருக்கும்.
இன்றைய தினத்தில் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும்.
கோபம், பதற்றம் வேண்டாம். முடிந்தால் மௌன விரதம் இருக்கலாம்.
எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.