Categories
மாநில செய்திகள்

“ஆடி கார் வாங்கி கொடுக்கல”… பெண்ணை கிரிக்கெட் மட்டையால் அடித்த கணவர்…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டி பட்டியில் கீர்த்தி ராஜ்(31) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தனஸ்ரீ (26) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சென்ற 3 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவன் -மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சென்ற ஒருவாரத்திற்கு முன்னதாக தனஸ்ரீ தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று கணவர், மனைவியை சமாதானம்செய்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் நேற்றிரவே தன ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பின் பெற்றோர் நேரில்வந்து பார்த்தபோது தனஸ்ரீ தலைப்பகுதி, உடல் முழுதும் காயங்கள் இருந்திருக்கிறது. மேலும் வீடு முழுதும் ரத்தக்கரை இருந்திருக்கிறது. அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையில் ரத்தம் படிந்து இருக்கிறது. அப்போது தான் கிரிக்கெட்மட்டையால் தங்களது மகளை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதனை தொடர்ந்து சூரமங்கலம் போலீஸ்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் “திருமணத்துக்கு சில மாதங்களுக்குப் பிறகே ஆடிகார் வேண்டும் என கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்.

அத்துடன் வரதட்சணை போதவில்லை என கூறி கொடுமைப்படுத்தி வந்தனர் என புகார் அளித்துள்ளனர். பின் திருமணத்திற்குப் பிறகு 3 மாதங்கள் மட்டுமே எங்களது மகள் மகிழ்ச்சியாக இருந்தாள். அதன்பிறகே சித்திரவதைதான் அனுபவித்து வந்தாள். இந்த வாழ்க்கையே வேண்டாமென தான் எங்களுடன் வந்து வாழ்ந்தார். இதனிடையில் சமாதானம் பேசுவது போன்று அழைத்துச்சென்று கிரிக்கெட் மட்டையின் மூலம் மகளை அடித்து கொலை செய்து விட்டார்கள். அதுவும் 3ஆம் ஆண்டு திருமணநாளன்று அடித்துக் கொலைசெய்து இருக்கிறார்கள் . அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனை தரவேண்டும்” என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |