Categories
பல்சுவை

ஆடி மாதத்தில் மட்டும்…. ஏன் கடைகளில் தள்ளுபடி கொடுக்கிறார்கள்…? கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க…!!!

வருடத்திற்கு ஒருமுறை ஆடி மாதத்தில் எல்லா கடைகளிலும் ஆடிக் கழிவு என்ற பெயரில் பொருட்களை தள்ளுபடி விலையில் விற்று வருகின்றனர். மக்களும் ஆர்வமாக பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். இந்த ஆடித்தள்ளுபடி எவ்வாறு தோன்றியது ?என்பது குறித்து இப்போது பார்க்கலாம். அந்த காலத்தில் ஆடி மாதத்தில் விவசாயிகள் தங்கள் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் பயிர் செய்வதில் செலவிட்டு விடுவார்கள். அதனால் கையில் பணம் இருக்காது. எனவே ஆடி மாதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளையும் அவர்கள் வைக்க மாட்டார்கள்.

இதனால் ஆடி மாதத்தில் ஜவுளிக்கடை உள்ளிட்ட எந்தவொரு கடைகளிலும் வியாபாரம் இருக்காது. எனவே வியாபாரத்தை பெருக்கும் நோக்கத்தோடு ஜவுளி கடைகளில் “ஆடி கழிவு” என்று கூறி பொருட்களை விற்பனை செய்து வந்தார்கள். அந்த முறை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்  பண்டிகைகளுக்கு கடைகளில் மொத்தமாக பொருட்களை கொள்முதல் செய்வார்கள். அவ்வாறு  பண்டிகை காலங்களில் விற்றது போக மீதியிருக்கும் பழைய பொருட்களை விற்றுவிட்டு புது பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ஆடிக்கழிவு என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள்.

இவ்வாறு தள்ளுபடி விலையில் கிடைக்கும் பொருட்களை சரியாக பயன்படுத்தி வாங்கினால் நமக்கு தான் லாபம் . தள்ளுபடி விலையில் பொருள் கொடுக்கிறார்கள் என்றால் உடனே எதுவும் பார்க்காமல் அந்த பொருளை வாங்கினால் நமக்கு கஷ்டம். கம்பெனி பொருள்கள் வாங்கும்போது தள்ளுபடிக்கு முன்னாடி எவ்வளவு விலை? இப்போது எவ்வளவு விலை என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு குறைவாக இருந்தால் அந்த பொருளை வாங்கினால் நமக்கு பயங்கரமான லாபம் தான். காம்போ ஆபரில் இரண்டு பொருள் நமக்கு தேவைப்படும் மற்றது நமக்கு தேவைப்படாத அந்த சமயத்தில், விலை கம்மியாக இருந்தால் , அந்த 3 பொருள் யாருக்கு தேவைப்படுகிறதோ அவரை சேர்த்துக் கொண்டு வாங்குவது நமக்கு லாபம்.

Categories

Tech |