Categories
ஆட்டோ மொபைல்

ஆடி ஸ்பெஷல்!… இந்தியா வரப்போகும் புது மாடல் கார்…. என்னென்ன அம்சங்கள் தெரியுமா?….!!!!

ஆடி நிறுவனமானது பிளாக்‌ஷிப் A8L மாடலை அப்டேட் செய்த கையோடு முற்றிலும் புது Q3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அதுமட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட ஆடி விற்பனையாளர்கள் முற்றிலும் புது Q3 மாடலுக்கான முன் பதிவை தொடங்கிவிட்டனர். இந்த ஆடி Q3மாடல் Q8 கார்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. புது ஆடி Q3 மாடலில் ஹெக்சகன் வடிவம் உடைய ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்-கள், புது அலாய் வீல்கள், ரூப் ஸ்பாயிலர் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் புது Q3 மாடல் அதி நவீன MQB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள் புறம் புது இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமின்றி பெரும்பாலான புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. இக்காரில் 10 இன்ச் அளவில் டிரைவர் டிஸ்ப்ளே, 8.8 இன்ச் (அல்லது) 10.1 இன்ச் அளவில் இன்போடெயின் மெண்ட் டச் ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த புது ஆடிQ3 மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. மேலும் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ் மிஷன் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து குவாட்ரோ ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்தியசந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புது ஆடி Q3 மாடல் பி.எம்.டபிள்யூ. X1, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, வால்வோ XC40 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Categories

Tech |