அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சமத்துவமும் சமநீதியும் கிடைப்பதற்காக உபகண்டத்தில் உதித்த விடிவெள்ளி தான் டாக்டர் அம்பேத்கர். அவர்கள் படிக்காத துறையே இல்லை. பொருளாதாரம், தத்துவம், மெய்யறிவு என பல்வேறு துறைகளில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். ஆடுகள்தான் வெட்டப்படுகின்றன, சிங்கங்கள் அல்ல. இது டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய பிரசித்திபெற்ற வாசகம்.
சிங்கங்களாக இருங்கள், ஆடுகளாக இருக்காதீர்கள் என்று கூறினார். இன்றைக்கு இந்தியாவில் மக்களை ஆடுகள் ஆக்குகின்ற முயற்சியில் இந்துத்துவ சனாதன தர்மவாதிகள் முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு இன்றைக்கு சபதம் ஏற்போம். டாக்டர் அம்பேத்கர் புகழ் வாழ்க!!” என கூறினார்.