Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆடுமேய்க்க சென்ற தொழிலாளி… இப்படி நடக்கும்னு நினைக்கல… சிவகங்கையில் சோகம் ..!!

சிவகங்கை அருகே ஆடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஏனாதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடம்பு சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை வைப்பதற்காக அவர் கணக்கன் குடி கண்மாயிக்கு சென்றுள்ளார். அப்பகுதியில் மின்சார வயர் தாழ்வாக இருந்துள்ளது. அதனை கவனிக்காமல் கடம்பசாமி சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கடம்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூவந்தி காவல்துறையினர் கடம்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |