Categories
தேசிய செய்திகள்

ஆடு அறுக்க வராததால்…. நண்பனின் தலையை வெட்டி துண்டாக்கிய பயங்கரம்…. பரபரப்பு…..!!!!

வடக்கு அசாமில் பரிசாக கிடைத்த ஆட்டை வெட்டி கசாப்பு செய்ய வராததால் தனது நண்பனின் தலையை துண்டாக வெட்டிய பயங்கரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அசாமில் சோத்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. துநிராம் மாத்ரி என்ற 40 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஊரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட தலையுடன் அந்த நபர் சரண் அடைந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை என்று கொலை செய்யப்பட்ட பாயிலா ஹேமா ராம் மாத்ரியிடம் 500 ரூபாய் கடன் கேட்டுள்ளார். அதற்கு துணிராம் பணம் கொடுக்கவில்லை. திங்கட்கிழமை கால்பந்து போட்டியில் பரிசாக வென்ற ஆட்டை அறுப்பதற்காக தன்னுடன் இரட்சி கூட்டத்திற்கு வரும்படி ஹேமாறாமை கேட்டுள்ளார். ஆனால் 500 ரூபாய் கொடுக்காததால் அவர் நிராகரித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த துணிராம் ஹேமாறாமை கடுமையாக தாக்கி கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆஜரானார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |