தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிடுவோம் என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “நாங்கள் திரைப்படம் தயாரிப்பதை அதனை வெளியிடுவதற்கு தான். மேலும் திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்காக மட்டுமே. விபிஎப் சம்பந்தமான பெண்கள் சங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரோடக்சன் நிறுவனங்கள் திடீரென விபிஎப்- ஐ தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு இல்லை என்று அறிவித்துள்ளது.
மேலும் திரையரங்குகள் உடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி கொண்டிருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்குகளை பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. இது எங்களின் சிறிய வெற்றி. புதிய படங்களை கட்டணம் இல்லாத இந்த இரண்டு வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமன்றி விபி எப் கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் “என்று அவர் கூறியுள்ளார். தற்போது சமரச தீர்வு ஏற்பட்டுள்ள நிலையில் தீபாவளிக்கு புதிய படங்கள் திரைக்கு வருகின்றன.