கொரோனா தொற்று சில வகை விலங்குகளுக்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் விலங்கினங்களின் செல்களில் கொரோனா ஏற்படக்கூடிய அமைப்பு இருக்கிறதா? என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இதில் பாலூட்டி வகையைச் சார்ந்த சுமார் 44 வகை விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதாவது சில வகை திமிங்கலங்கள், காண்டாமிருகங்கள், குதிரைகள், பூனைகள், ஆடுகள், மாடுகள், கொரில்லாக்கள், சில வகை பாண்டா கரடிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற விலங்குகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சுமார் 50 பாலூட்டிகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கோலா வகை கரடிகள்,வெள்ளெலிகள் மற்றும் marmosets, tufted capuchin squirrel monkeys என்ற குரங்குகள் போன்ற 5 வகை விலங்குகளுக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிக்க வாய்ப்பு இல்லை என்று தெரியவந்திருக்கிறது. மேலும் சிங்கம் போன்ற வன விலங்குகளுக்கும் மனிதர்களின் கவனக்குறைவால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் இவ்வாறு மனிதர்கள் மூலம் வனவிலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டால் அந்த கிருமிகளை விலங்குகள் தங்களிடமே வைத்திருந்து மீண்டும் மீண்டும் கொரோனா தொற்றை பரப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.