ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் ,கோவில்பாளையம் பகுதியில் 80 வயதான வள்ளியம்மை என்பவர் தனது மகன் பழனிசாமியுடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வள்ளியம்மை அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்திலுள்ள அவரது உறவினர் வீட்டிற்க்கு ஒரு வாரம் முன்பு சென்றுள்ளார் .அப்போது உறவினர் வீட்டில் வயல்களை பார்ப்பது ஆடுகளை மேய்ப்பது போன்ற வேலைகளை அங்கு பார்த்துள்ளார்.
சம்பவத்தன்று ஆடு மேய்ப்பதற்காக வயலுக்கு சென்றுள்ள வயதான வள்ளியம்மையை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் அங்கு தனியாக இருந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார் .அதன் பின்னர் காட்டுக்குள் மயங்கி இருந்த வள்ளியம்மையை பார்த்த அப்பகுதியிலுள்ள மக்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .
தற்போது மூதாட்டி வள்ளியம்மை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அந்த புகாரின் பேரில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள் .