Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் நடுத்தெருவில் பெரியநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மேரி அப்பகுதியில் இருக்கும் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மேரியின் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் அலறி சத்தம் போட்ட மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |