நாம் உலகத்தில் எத்தனையோ விதமான கண்காட்சிகளை பார்த்திருக்கலாம். இந்த கண்காட்சிகள் இயற்கை காட்சிகள், அரசர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், பழங்கற்காலம் உள்ளிட்ட பலவற்றை விளக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்நிலையில் what where you wearing என்ற கண்காட்சியில் வித்தியாசமாக ஒரு சாதாரண மனிதன் அணியும் ஆடைகள், பள்ளி மாணவர்களின் சீருடைகள் போன்றவைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த கண்காட்சியை ஜென் ப்ரோக்மேன் மற்றும் டாக்டர் மேரி வியான்ட்-ஹைபர்ட் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.
இது ஒரு அமெரிக்க சுற்றுலா கலை கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சி ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிறுவப்பட்டுள்ளது. இது ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது முதலில் அந்த பெண்ணிடம் நீங்கள் என்ன ஆடை அணிந்து இருப்பீர்கள் என்ற கேள்வியை தான் கேட்பார்கள். எனவே பாலியல் வன்கொடுமையை சித்தரிக்கும் விதமாக what where you wearing என்ற கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.