தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பிரஜின் தற்போது D3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்க, பீமாஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மற்றும் ஜேகேஎம் ப்ரோடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் வித்யா பிரதீப் ஹீரோயினாக நடிக்க, மோகமுள் அபிஷேக், வர்கீஸ் மேத்யூ மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் கதையின் தேவைக்காக ஆடையின்றி நிர்வாணமாக நடித்ததாக அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 19 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் நான், எனக்கான இடத்தை இன்னும் பிடிக்கவில்லை. அந்த இடத்தை ‘D3’ பெற்று கொடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.