பெண்களின் ஆடையை மாற்றுவதற்கு முன்பு உங்களின் எண்ணத்தை மாற்றுங்கள் என அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டில் புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் பெண்களின் ஆடை குறித்து விமர்சித்தார். இது பெரும் சர்ச்சையானது. நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது நான் ஒரு முறை விமானத்தில் பயணித்தபோது குழந்தையுடன் இருந்த பெண் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தார் என்ன மாதிரியான நடத்த இது கிழிந்த ஜீன்ஸ் அணிவது சமூக முறிவுக்கு வழிவகுக்கிறது பெற்றோர்களால் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட மோசமான முன்மாதிரி என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இதையடுத்து அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா அமைச்சரின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். எங்கள் ஆடையை மாற்றுவதற்கு முன், உங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இத்தகைய கருத்தை நீங்கள் சமூகத்தில் சொல்வது, என்னை அதிர்ச்சிக்குள் ஆழ்த்துகிறது. நான் கிழிந்த ஜீன்ஸ் தான் அணிவேன். நன்றி. அதனைப் பெருமையுடன் அணிந்துகொள்வேன் என அவர் பதிவிட்டார்