Categories
சினிமா தமிழ் சினிமா

ஆடையை மாற்றுவது போல….. இதையும் மாற்றுகிறார்கள்….. ஆதங்கம் தெரிவித்த நடிகை….!!!!!

விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் நடிகை ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோன்று இவர் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மக்கள் ஆடையை மாற்றுவதுபோல காதலை மாற்றுவதாக நடிகை ரேஷ்மா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், “பெண்களை தங்களுடைய தேவைக்கு பயன்படுத்திக்கொள்பவர்கள்தான் நிறையப்பேர் இருக்கிறார்கள். வலுவான பெண்கள் கூட ஏமாற்றப்படுகிறார்கள். அவ்வாறு ஏமாற்றப்படும் நாம் மனதளவில் உடைந்துவிடாமல் இருந்து நாம் யார் என்பதை காட்ட வேண்டும். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார்” என கூறியுள்ளார்.

Categories

Tech |