Categories
இந்திய சினிமா சினிமா

ஆடை வடிவமைப்பாளர் பலாத்காரம்….. பிரபல பாடகர் வெறிச்செயல்….!!!!

மும்பையில் வசித்து வரும் பெண் ஆடை வடிவமைப்பாளர், காவல் நிலையத்தில் பிரபல பாலிவுட் பாடகரும் இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகிய ராகுல் ஜெயின் தனது ஆடை வடிவமைப்பு பணிகளை வெகுவாக பாராட்டி அவருக்கான தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக தன்னை நியமிப்பதாக வாக்குறுதி அளித்தார். சம்பவத்தன்று தன்னை மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்ததால் அவரை சந்திக்க சென்றேன்.

அப்போது வீட்டை சுற்றிக் காட்டுகிறேன் என்று கூறி தன்னை படுக்கை அறைக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். அதை நான் எதிர்த்தபோது என்னை கடுமையாக தாக்கினார்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ராகுல் ஜெயின் அந்த பெண் யார் என்பதே எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். பாடகர் ராகுல் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |