நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியனார்,.அதில் “ஓபிஎஸ் தினகரனைச் சந்திப்பது ஒன்றும் புதிது இல்லை. அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டனர். இன்றைக்குக் கழகம் வலுவாக இருக்கிறது.1 சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும்.
அது பொதுக்குழு அல்ல பொய்க்குழு. தொடக்கத்தில் இருந்தே டிடிவி தினகரனுடன் தொடர்பில் இருந்தவர் ஓபிஎஸ். தன்னுடைய கட்சிக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யும் ஓபிஎஸ் நடத்துவது கட்சியல்ல, அது ஒரு கம்பெனி என கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் தலைக்குமேல் பிரச்னைகள் உள்ளபோது ஸ்டாலினும் உதயநிதியும் லவ்டுடே டிஸ்கஷனில் பிசியாக இருக்கிறார்கள் என கிண்டலடித்துள்ளார்.